முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை, இந்தியாவில் எதிர்கொள்வதை விட கடினம் ஏதுமில்லை: ஆஸி. நட்சத்திர வீரர்

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரராக மாறியுள்ள லாபஸ்சாக்னே, இந்தியாவை இந்தியாவில் எதிர்கொள்வதை விட கடினம் ஏதுமில்லை எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள லாபஸ்சாக்னே (வயது 25), அபார ஆட்டத்தால் தலைசிறந்த நட்சத்திர வீரராக உருவாகியுள்ளார். கடந்த ஐந்து போட்டிகளில் நான்கில் சதம் அடித்து அசத்தினார். விரைவாக 1000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேன் சாதனையை முறியடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான சிட்னி போட்டியில் இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் போடடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்திய தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லாபஸ்சாக்னே, இந்தியாவை இந்திய மண்ணில் எதிர்கொள்வதை விட கடினமானது ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மார்னஸ் லாபஸ்சாக்னே கூறுகையில், இந்தியாவில் எப்போதெல்லாம் விளையாடுகிறமோ, அப்போதெல்லாம் அது கடினமான தொடராக இருக்கும். ஏனென்றால், அவர்கள் மிகவும் கடினமாக எதிரணி. அவர்கள் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளனர். ஆகவே, இந்த தொடர் சவாலானதாக இருக்கும்.ஆனால் ஒரு வீரர், அவரை பரிசோதனை செய்து கொள்ள கடினமான சூழ்நிலையில் சிறந்த எதிரணியை எதிர்த்து விளையாட விரும்புவார்கள். இந்தியாவை இந்தியாவில் எதிர்கொள்வதை விட கடினம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து