முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது அணை கட்டக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

புதன்கிழமை, 8 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டமன்றப் பேரவையில் அளித்த பதில் வருமாறு,

தென்பெண்ணை ஆறு குறித்த மூல வழக்கு ஏற்கனவே இருக்கிறது. அப்படி மூல வழக்கு இருக்கும்பொழுதே அவர்கள் கட்டிக் கொண்டிருந்தார்கள், நாமும் வாதாடிக் கொண்டிருந்தோம், இருந்தாலும் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளோம். மேகதாது அணையையும் கட்டக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். ஏற்கனவே இதற்கு முன்பு கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்படி காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபொழுது, நேற்றையதினமே சொன்னேன், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது, அப்போது அங்கு நீர்வளத் துறை அமைச்சராக இருந்தவர் அந்த இடத்திற்கே நேரில் சென்றார்.  நீங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்தீர்கள். இருந்தாலும் நம்முடைய கொள்கையிலிருந்து மாறுபடாமல் மேகதாது அணை கட்டினால் தமிழகம் வறண்டு போய்விடும். அதை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி கொண்டு இருக்கின்றோம். எந்த வகையிலும்  மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கக்கூடாது, நாம் இடைக்கால மனு அளித்திருக்கின்றோம், மூல வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகவே, உங்களுடைய நோக்கமும், எங்களுடைய நோக்கமும் ஒன்றாக இருக்கின்றது. மேகதாது அணை கட்டக் கூடாது என்பதிலே நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். நீதிமன்றத்தின் மூலமாக சட்டப் போராட்டம் நடத்தி நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து