முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட ஊராட்சி, ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் - ஐகோர்ட் கிளையில் ஆணையம் உறுதி

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

மதுரை : மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம்  ஐகோர்ட் மதுரைக் கிளையில் உறுதி அளித்துள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் மாதம் ,27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து 27 மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியிடம், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியிடம், 9624 கிராம ஊராட்சி துணை தலைவர் உள்ளிட்ட 10,306 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை 11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை வீடியோ பதிவு செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. மனுத்தாக்கல் செய்திருந்தது. இதே போன்று திண்டுக்கல்லை சேர்ந்த லலிதா என்பவரும் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது பதிலளிக்க தமிழக தேர்தல்  ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு நேற்று நீதிமன்ற நிர்வாக நீதிபதி துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஆணையம் தரப்பில் தேவைப்படும் இடங்களில் வீடியோபதிவு செய்யலாம் என தான் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அனைத்து இடங்களிலும் முறைகேடுகள் நடந்த வண்ணம் உள்ளது. ஆதலால் அனைத்து இடங்களிலும் மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜனவரி 11-ல் நடைபெறும் மறைமுகத் தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என்று ஐகோர்ட் மதுரைக் கிளையில் உறுதி அளித்தார். அத்துடன் வீடியோ பதிவு தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிமன்றம், வீடியோ பதிவு தொடர்பாக தேர்தல் கமிஷன் தரப்பில் வரும் 21-ம் தேதி  பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து