முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதில் உள்நோக்கம் ஏதுமில்லை சென்னையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேட்டி

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை கடந்த 2017-ம் ஆண்டு பெற்றுத் தந்தனர். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பாதுகாப்பு தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் முடிவில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வேண்டாம் என கருதியதால் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு இருப்பதாக கூறினார். அந்த வகையில் தனக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் ஆங்கிலோ இந்தியர்களுக்கான பிரதிநிதித்துவத்தை நீக்குவது தொடர்பான மத்திய அரசின் மசோதா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆங்கிலோ இந்தியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அ.தி.மு.க. வின் நிலைப்பாட்டை மாநிலங்களவையில் கூறியிருப்பதாகவும், தொடர்புடைய அமைச்சகம் அதனை பரிசீலப்பதாக தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து