முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய குடியுரிமை பதிவேட்டை புறக்கணிக்க வேண்டும்: 23 இஸ்லாமிய அமைப்பினர் முதல்வரிடம் கோரிக்கை மனு

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

தேசிய குடியுரிமை பதிவேட்டை புறக்கணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 23 இஸ்லாமிய அமைப்பினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அவரது இல்லத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, இஸ்லாமியர்கள் கூட்டமைப்பினர் சந்தித்து மனு அளித்தனர்.  இக்குழுவினருடன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நாகப்பட்டினம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து இஸ்லாமிய மக்களிடையே மிகுந்த அச்சம் உள்ளதால் தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என முதல்வரிடம் இக்கூட்டமைப்பினர் எடுத்துரைத்தனர். பின்னர் பேட்டி அளித்த அவர்கள், சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்ததாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து