முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குலுக்கல் முறையில் ஹஜ் பயணிகள் தேர்வு வரும் 13-ம் தேதி நடைபெறும்: தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

ஹஜ் செல்லும் பயணிகளைக் குலுக்கல் முறை மூலம் தேர்வு செய்யும் பணி வரும் 13-ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஹஜ் 2020-க்காக 6,028 (7 குழந்தைகள் உட்பட) விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஹஜ் பயணிகளிடமிருந்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. எனவே, ஹஜ் 2020-க்கான ஹஜ் பயணிகளை 13.01.2020 அன்று குலுக்கல் முறை மூலம் தேர்வு செய்யுமாறு மும்பை, இந்திய ஹஜ் குழு, மாநில ஹஜ் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மும்பை, இந்திய ஹஜ் கமிட்டி கேட்டுக் கொண்டபடி, ஹஜ் பயணம் செல்ல 2020-க்கான ஹஜ் பயணிகளை குலுக்கல் முறை மூலம் தேர்வு செய்ய தமிழ்நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது. இக்குலுக்கல் நிகழ்ச்சி வரும் 13-ம் தேதி காலை 11.30 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, புதுக் கல்லூரியிலுள்ள, ஆனைக்கார் அப்துல் சுக்கூர் அரங்கத்தில் நடைபெறும்.  2018-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு மாநில ஹஜ் புனிதப் பயணிகளுக்கு ஹஜ் மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஹஜ் 2020-க்காக ஹஜ் மானியத் தொகை வழங்கும் பொருட்டு, குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறையிலுள்ள அனைத்துப் பயணிகளும் தங்களின் தனிப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகலினை ( IFSC குறியீடு அடங்கிய ) தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  ஹஜ் 2020-க்காக, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலமாக விண்ணப்பித்துள்ள புனிதப் பயணிகள், இக்குலுக்கலில் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை வெற்றிகரமாக நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து