முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு சாதி, பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்

சனிக்கிழமை, 11 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுத சாதி, பிறப்புச் சான்றிதழ்கள் கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்வதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய சட்டத் திருத்தப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இது சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசின் ஆணைப்படி, நடப்புக் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செப்டம்பர் 13-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ், ஆதார் ஆகியவை கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து அனைத்துப் பள்ளிகளிலும் 5,8-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை எமிஸ் எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு தளத்தில் பதிவேற்ற வேண்டும். அனைத்து தலைமை ஆசிரியர்களும் மாணவர்களின் பெயர், முகவரி, பெற்றோர் விவரங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களைப் பெற வேண்டும். அதே போல, மாணவர்களின் ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றையும் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து