சச்சின் சாதனையை சமன் செய்ய விராட் கோலிக்கு வாய்ப்பு

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2020      விளையாட்டு
Sachin-Virat Kohli 2020 01 13

புதுடெல்லி : ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் அதிக சதம் அடித்து சாதனைப் படைத்திருக்கும் சச்சினை சமன் செய்ய விராட் கோலிக்கு ஒரு சதம் தேவையுள்ளது.

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். பேட்டிங்கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏராளமான சாதனைகள் படைத்துள்ளார். இவரது சாதனைகளை ஒன்றொன்றாக விராட் கோலி முறியடித்து வருகிறார்.ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுர்கர் 49 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். விராட் கோலி 43 சதங்கள் அடித்துள்ளார்.சச்சின் தெண்டுல்கர் 49-ல் 20 சதங்களை இந்திய மண்ணில் அடித்துள்ளார். விராட் கோலி 43-ல் 19 சதங்களை இந்திய மண்ணில் அடித்துள்ளார்.நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஒரு சதம் அடித்தார் சச்சின் சாதனையை சமன் செய்வார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து