முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுவர் திருநாள் - தமிழ் புத்தாண்டு விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்களை அறிவித்தது தமிழக அரசு

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை  : திருவள்ளுவர் திருநாள் மற்றும் சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகளுக்கான விருதாளர்களை முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தியுள்ளது.  அவ்வகையில் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் மற்றும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு  விருதுகளுக்கான விருதாளர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அவ்வகையில், 2020-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது ந. நித்தியானந்தபாரதி,  2019-ம் ஆண்டிற்கான  தந்தை பெரியார் விருது செஞ்சி ந. இராமச்சந்திரன் ஆகியோருக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது முனைவர் க. அருச்சுனனுக்கும், பேரறிஞர் அண்ணா விருது  முனைவர் கோ. சமரசத்திற்கும், காமராசர் விருது  கவாலியர்  முனைவர்  மா.சு.மதிவாணனுக்கும், மகாகவி பாரதியார் விருது பேராசிரியர் முனைவர் ப.சிவராஜிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது த. தேனிசைசெல்லப்பாவுக்கும், திரு.வி.க. விருது முனைவர் சே.சுந்தரராசனுக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது மருத்துவர் மணிமேகலை கண்ணனுக்கும் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும், சித்திரை முதல் நாள்  தமிழ்ப் புத்தாண்டை  சிறப்பிக்கும் வகையில்  தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் தமிழ் அறிஞர்களுக்கும் மற்றும் தமிழ் அமைப்புகளை ஏற்படுத்தி தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை போற்றிப் பாதுகாக்கும் வகையில் செயலாற்றி வரும்  சிறந்த தமிழ் அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கத்தக்க வகையில் விருதுகள் அம்மாவால் தோற்றுவிக்கப்பட்டன.  அதனைத் தொடர்ந்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆண்டுதோறும்  தமிழறிஞர்களின் பெயரில் புதிய விருதுகள் தோற்றுவிக்கப்பட்டு  வழங்கப்பட்டு வருகின்றன.  அவ்வகையில் 2019-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது  சிகாகோ தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது  புலவர் வெற்றியழகனுக்கும், உ.வே.சா விருது வே. மகாதேவனுக்கும், கம்பர் விருது  முனைவர் சரசுவதி இராமநாதனுக்கும், சொல்லின் செல்வர் விருது  சிந்தனைக் கவிஞர் முனைவர் கவிதாசனுக்கும், உமறுப்புலவர் விருது  லியாகத் அலிகானுக்கும், ஜி.யு.போப் விருது   மரிய ஜோசப் சேவியருக்கும், இளங்கோவடிகள் விருது  கவிக்கோ ஞானச்செல்வன் (எ)   கோ. திருஞானசம்பந்தத்திற்கும் அம்மா இலக்கிய விருது உமையாள் முத்துவிற்கும், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது அசோகா சுப்பிரமணியன் (எ)   சோ.கா. சுப்ரமணியனுக்கும், மறைமலையடிகளார் விருது  புலவர் ப. முத்துக்குமாரசுவாமிக்கும், அயோத்திதாசப் பண்டிதர் விருது  புலவர் வே. பிரபாகரனுக்கும், சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது சா. முகம்மது யூசுப்,  க.ஜ. மஸ்தான் அலி, பேராசிரியர் சிவ. முருகேசன்,  முனைவர் ந. கடிகாசலம், மரபின் மைந்தன் (முத்தையா), வத்சலா, மருத்துவர் முருகுதுரை, மாலன் (எ) வே. நாராயணன், கிருசாங்கினி (எ) பிருந்தா நாகராசன், அ. மதிவாணன் ஆகிய பத்து பேருக்கும் மற்றும் 2018-ம் ஆண்டிற்கான  முதலமைச்சர் கணினித் தமிழ் விருது  முனைவர் த. நாகராசனுக்கும், 2019-ம் ஆண்டிற்கான இலக்கிய விருது மலேசிய நாட்டைச் சேர்ந்த பெ. இராசேந்திரனுக்கும், இலக்கண விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த முத்து கஸ்தூரிபாய்க்கும், மொழியியல் விருது இலங்கை நாட்டைச் சேர்ந்த முனைவர் சுபதினி ரமேசுக்கும், வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் மேற்குறிப்பிட்ட விருதுகள் திருவள்ளுவராண்டு 2051, தைத் திங்கள் 6-ம் நாள், 20.01.2020 திங்கள் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும்  தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்பட உள்ளன.  விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக ஒரு லட்சம்  ரூபாயும் தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்பிற்கு 5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.  மேலும், இவர்களுக்கு விருதுக்கான தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து