முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் சண்டை: ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

சிரியாவில் அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அவ்வப்போது சண்டை நிறுத்தங்கள் வந்தாலும், போர் முடிவுக்கு வந்தபாடில்லை. உள்நாட்டுப்போர் முடிவுக்கு வர வேண்டுமானால் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இத்லிப் மாகாணத்தை அவர்களின் பிடியில் இருந்து விடுவித்தாக வேண்டும் என்பது சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் உறுதியான கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் சிரியாவில் கடைசியாக ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் மேற்கொண்ட சமரச முயற்சிக்கு பின்னர் கடந்த 12-ம் தேதி சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அங்கு இத்லிப் மாகாணத்தின் மாரெட் அல் நுமான் நகர பகுதிகளில் அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

இந்த சண்டையில் ஒரே நாளில் இரு தரப்பிலும் சேர்த்து 39 பேர் பலியாகினர். கிளர்ச்சியாளர்கள் படையில் 22 பேரும், அதிபர் ஆதரவு படையில் 17 பேரும் பலியானதாக இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு செயல்படுகிற சிரியா மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு கூறியது. இதற்கிடையே இத்லிப் நகரத்தில் போர் விமானங்கள் பறந்து குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் அங்குள்ள சந்தை சிக்கியது. குண்டு மழையில் கடைகள், கார்கள் எரிந்தன. அப்பாவி மக்கள் 18 பேர் பலியாகினர். இந்த வான்தாக்குதலை ரஷ்யா மற்றும் சிரியா போர் விமானங்கள் நடத்தியதாக இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு செயல்படுகிற சிரியா மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு கூறியது. இத்லிப் மாகாணத்தில் சண்டை வலுத்து வருகிற நிலையில், அங்கு வசித்து வந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஊரை காலி செய்து விட்டு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து