ஒருநாள் போட்டியில் 29-வது சதம் அடித்து ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளிய ரோகித்சர்மா

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      விளையாட்டு
rohit sharma 2020 01 20

பெங்களூரூ : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் ரோகித்சர்மா சதம் அடித்ததன் மூலம் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல ரோகித் சர்மா முக்கிய பங்கு வகித்தார். அவர் அதிரடியாக விளையாடி 119 ரன் குவித்தார். இதில் 8 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவின் 29-வது சதமாகும். 224 போட்டியில் 217 இன்னிங்சில் இதை எடுத்தார். இதன் மூலம் அதிக சதம் அடித்த வீரர்களில் 4-வது இடத்தில் இருந்த ஜெயசூர்யாவை முந்தினார்.தெண்டுல்கர் (49 சதம்), விராட் கோலி (43), ரிக்கி பாண்டிங் (30) ஆகியோருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா தற்போது 4-வது இடத்தில் உள்ளார். ஜெயசூர்யா 28 செஞ்சுரியுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

32 வயதான ரோகித் சர்மா 29 சதத்தில் 19 செஞ்சுரியை கடைசி 70 இன்னிங்சில் எடுத்து (2017-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து) முத்திரை பதித்தார். 2017-ம் ஆண்டுக்கு முன்பு 147 இன்னிங்சில் 10 சதமே அடித்து இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா 8-வது சதத்தை (40 இன்னிங்ஸ்) எடுத்தார். தெண்டுல்கர் 9 சதம் (70 இன்னிங்ஸ்) அடித்து முதலிடத்தில் உள்ளார். விராட்கோலி 38 இன்னிங்சில் 8 சதம் அடித்து இருந்தார். அவரை ரோகித் சமன் செய்தார்.ஒரு நாட்டுக்கு எதிராக 8 சதங்களுக்கு மேல் இந்திய வீரர்கள் மட்டுமே அடித்துள்ளனர். கோலி, தெண்டுல்கர், ரோகித் சர்மா இந்த வரிசையில் உள்ளனர்.கோலி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 9 சதம் அடித்து இருக்கிறார். ரோகித் சர்மா 4 ரன் எடுத்த போது ஒருநாள் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை கடந்தார். 9 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் எடுத்த 3-வது வீரர் ரோகித் சர்மா ஆவார். 217 இன்னிங்சில் அவர் எடுத்தார். விராட்கோலி 194 இன்னிங்சில் எடுத்து முதல் இடத்திலும், டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) 208 இன்னிங்சில் எடுத்து 2-வது இடத்திலும் உள்ளனர்

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து