ஆஸ்திரேலியா ஓபன்: ரோஜர் பெடரர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      விளையாட்டு
Roger Federer 2020 01 20

மெல்போர்ன் : மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபனில் 3 - ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2 - வது சுற்றுக்கு முன்னேறினார்.

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் நேற்று மெல்போர்ன் நகரில் தொடங்கியது. இந்த தொடருக்கான 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் முதல் சுற்றில் தரநிலை பெறாத அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவ் ஜான்சனை எதிர்கொண்டார். இதில் ரோஜர் பெடரர் 6-3, 6-2, 6-2 என நெர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.19-வது கோர்ட்டில் நடைபெற்ற பெரும்பாலான ஆட்டங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து