முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் சரோஜா ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றது செல்லும் - சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றது செல்லும் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் சரோஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வி.பி.துரைசாமியை விட 9 ஆயிரத்து 631 ஓட்டுகள் அதிகம் பெற்று சரோஜா வெற்றி பெற்றார். தற்போது சரோஜா அமைச்சராக உள்ளார். இதையடுத்து அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக சரோஜா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து சரோஜாவின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் வி.பி.துரைசாமி தொடர்ந்த மனுவையும் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து