பெங்கால் அணிக்காக விளையாட வேண்டாம்: சகாவுக்கு பி.சி.சி.ஐ. அறிவுரை

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      விளையாட்டு
BCCI Advice Saga 2020 01 22

நியூசிலாந்து டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக விளையாட வேண்டாம் என சகாவிடம் பி.சி.சி.ஐ. கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சகா. வங்காளதேசம் அணிக்கெதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் போது பந்தை பிடித்தபோது கைவிரலில் முறிவு ஏற்பட்டது. தற்போது காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டார். இதனால் ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்கெதிராக பெங்கால் அணிக்காக விளையாட திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் இந்தியா நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 21-ம் தேதி தொடங்குகிறது. இதில் விளையாடும் வகையில் உடற்தகுதியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, ரஞ்சி போட்டியை புறக்கணிக்கும்படி சகாவிடம் பி.சி.சி.ஐ. கேட்டுக்கொண்டுள்ளது.டெல்லி அணிக்காக விளையாடிய இஷாந்த் சர்மாவுக்கு போட்டியின்போது காயம் ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்து தொடரில் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து