ரஜினிக்கு எதிரான போராட்டம்: நடிகை குஷ்பு கடும் கண்டனம்

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      தமிழகம்
Khushboo 2020 01 23

சென்னை :  பெரியார் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது, அவரது வீட்டு முன்பு இடைஞ்சல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.  

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு இதுபற்றி கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக ஒரு மாபெரும் நடிகரான ரஜினிக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் வேண்டுமென்றே நடத்தப்படுவது தெளிவாக தெரிகிறது.

ரஜினி பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் அவரது கருத்தை தெரிவிப்பதும் இது முதல் முறையல்ல. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு போன்றோர் கலந்துகொண்ட பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.

அதற்காக அவரை பா.ஜனதா கட்சிக்காரர் என்றோ, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் என்றோ சொல்லமுடியாது. அவர் அரசியலுக்கு வரட்டும் அதன்பிறகு அரசியல் ரீதியாக எதிர்ப்பை தெரிவிக்கலாம்.

இப்போது அவர் துக்ளக் பத்திரிகை விழாவில் கலந்து இருக்கிறார். அப்போது அவர் பேசியது மூன்று, நான்கு நாட்கள் கழித்து இவ்வளவு பூதாகரமாக்கப்பட என்ன காரணம்?
ரஜினியை பொறுத்த வரை மிகப்பெரிய நடிகர். ஜனநாயக நாட்டில் அவரது கருத்துகளை தெரிவிக்க அவருக்கு முழு உரிமை உண்டு. அவரது கருத்து பிடிக்கவில்லையா? அதற்கும் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பை தெரிவிக்கலாம்.

அதைவிட்டு விட்டு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்துவது. அவரது வீட்டு முன்பு சென்று இடைஞ்சல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து