ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காயம் காரணமாக சானியா மிர்சா விலகல்

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      விளையாட்டு
sania mirza 2020 01 23

ஹோபர்ட் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் சானிய மிர்சா விலகினார்.

மகளிர் இரட்டை பிரிவின் முதல் சுற்றில் இருந்து காயம் காரணமாக சானியா மிர்சா விலகினார். இந்திய டென்னிஸ் புயல் சானியா மிர்சா(33) 2017-ம் ஆண்டு நடைபெற்ற சீன ஓபன் போட்டிக்கு பிறகு ஓய்வில் இருந்தார்.  இந்நிலையில் 2020 ஜனவரியில் நடைபெறும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும்  சனியா களம் இறங்கினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து ஆட திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் வலது பின்னங்காலில் பிரச்சினை இருப்பதால் கடைசி நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து சானியா விளக்கியுள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடுவதால் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு தொடர்ந்து போட்டியில் விளையாட முடியாமல் போக வாய்ப்பு இருப்பதால் ஏதாவது ஒரு போட்டியில் விளையாட முடிவு எடுத்துள்ளதாக சானியா மிர்சா கூறியுள்ளார். பெண்கள் இரட்டையர் பிரிவில் அவர் உக்ரைனின் நாடியா கிச்செனோக்குடன் கைகோர்த்து களம் இறங்குகிறார்.சானியா-சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் உக்ரேன் வீராங்கனை  நாடியாவுடன் சேர்ந்து  6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று சானியா – நாடியாஜோடி கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து