மாயமான 10 ஆயிரம் தமிழர் பற்றி விசாரணை: கோத்தபய ராஜபக்சே

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      உலகம்
Gotabhaya Rajapaksa 2020 01 25

கொழும்பு : இலங்கை போரில் மாயமான 10 ஆயிரம் தமிழர் பற்றி விசாரணை நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்ட போரில் 40 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் மாயமாகினர். அவர்களை கண்டுபிடித்து தரும்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஐ.நா. சபை அதிகாரி லீலாதேவி அனந்த நடராஜாவை சந்தித்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இறுதி போரின் போது காணாமல் போன 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இறந்து இருக்கலாம் என தெரிவித்தார். இது மாயமானவர்களின் குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோத்தபய ராஜபக்சேவின் இந்த அறிவிப்பை ஐ.நா. அதிகாரி லீலாதேவியும், மாயமானவர்களின் குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்ளவில்லை. மாயமானவர்களை தங்கள் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அதற்கு பணிந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே மாயமானவர்கள் குறித்து அறிந்து கொள்ள விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மாயமானவர்கள் குறித்த தீவிர விசாரணைக்கு பிறகே அவர்களது குடும்பத்தினரிடம் இறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து