கொரோனா வைரஸ் சீனாவின் உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையது - இஸ்ரேல் நிபுணர் கருத்து

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      உலகம்
Israeli expert opinion corono virus 2020 01 25

வுகான் : கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையது என இஸ்ரேலிய உயிரியல் போர் நிபுணர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகளவில் பரவும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய வுகான் ஆய்வகத்தில் தோன்றியிருக்கலாம் என்று இஸ்ரேலிய உயிரியல் போர் நிபுணர் தெரிவித்துள்ளார். சீனாவின் மிக மேம்பட்ட வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகமான வுகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி குறித்த செய்தியை 2015-ம் ஆண்டு உள்ளுர் வுஹான் தொலைக்காட்சி முதலில் வெளியிட்டது, அதே செய்தியை ரேடியோ ப்ரீ ஆசியா இந்த வாரம் மறு ஒளிபரப்பியது. சீனாவில் ஆபத்தான வைரஸ்களை ஆய்வு செய்யும் திறன் கொண்ட ஒரே தளம் இந்த ஆய்வகமாகும். சீன உயிரியல் ஆயுதம்  குறித்து ஆய்வு செய்த முன்னாள் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு அதிகாரி டேனி ஷோஹாம் கூறியதாவது:-

இந்த வுகான் இன்ஸ்டிடியூட் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுத திட்டத்துடன் தொடர்புடையது. இந்த இன்ஸ்டிடியூட்ல் உள்ள சில ஆய்வகங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் அடிப்படையில், சீன உயிரியல் ஆயுத திட்டத்துடன் குறைந்தபட்சம் தொடர்புடையது. ஆனால் சீன உயிரியல் போரின் முக்கிய அங்கமாக இல்லை. உயிரியல் ஆயுதங்களுக்கான பணிகள் இரட்டை உள்ளூர் - இராணுவ ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படுகின்றன, மேலும் இது நிச்சயமாக ரகசியமானது என கூறினார். ஷோஹாம் மருத்துவ நுண்ணுயிரியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1970 முதல் 1991 வரை அவர் மத்திய கிழக்கு மற்றும் உலகளவில் உயிரியல் மற்றும் வேதியியல் போருக்கான இஸ்ரேலிய இராணுவ உளவுத்துறையுடன் மூத்த ஆய்வாளராக இருந்தார், லெப்டினன்ட் கர்னல் பதவியிலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து