முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 2-வது 20 ஓவர் ஆட்டம்: நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் அதிரடி நீடிக்குமா?

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

ஆக்லாந்து : நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று  நடக்கவுள்ள 2-வது 20 ஓவர் ஆட்டத்தில் இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று (26-ந்தேதி) நடக்கிறது. இந்த போட்டியிலும் இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.முதல் ஆட்டத்தில் 204 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது மிகவும் சிறப்பான ஒன்றாகும். லோகேஷ் ராகுல், ஸ்ரோயஸ் அய்யர், கேப்டன் விராட் கோலி ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். விக்கெட் கீப்பிங்கிலும் ராகுல் சிறப்பாக செயல்படுவதால் ரி‌ஷப் பண்ட் மீண்டும் அணிக்கு வருவது கடினமானதே. மனிஷ் பாண்டே தொடர்ந்து மிடில் வரிசையில் ஆடலாம். ஒருவேளை சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அவர் கழற்றி விடப்படலாம்.ஆல்ரவுண்டரான ஷிவம் துபே தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பந்து வீச்சில் நேர்த்தியுடன் செயல்பட்டதால் தொடர்ந்து வாய்ப்பில் இருப்பார். பும்ரா, யசுவேந்திர சஹால் ரன்களை கொடுக்காமல் சிறப்பாக வீசினார்கள். ஆனால் முகமது‌ஷமி, ‌ஷர்துல் தாகூர் ரன்களை வாரி கொடுத்தனர். இதனால் அவர்கள் நாளைய போட்டியில் நேர்த்தியுடன் வீசுவது அவசியமாகும். வெற்றி அணி என்பதால் கோலி வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய மாட்டார் என்று கருதப்படுகிறது. சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்வியால் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அதிர்ச்சி அடைந்து உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் இருக்கிறது. கேப்டன் வில்லியம்சன், முன்னாள் கேப்டன் டெய்லர், காலின் முன்ரோ, குப்தில் ஆகியோர் பேட்டிங்கில் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர். ஆனால் அந்த அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் அதை சரி செய்யும் வகையில் ஆடுவார்கள். இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். இரு அணிகளும் இன்று மோதுவது 13-வது போட்டியாகும். இதுவரை நடந்த 12 ஆட்டத்தில் இந்தியா 4-ல், நியூசிலாந்து 8-ல் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 12.20 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்திய அணியில் விராட்கோலி (கேப்டன்) ரோகித்சர்மா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷப்பண்ட், ஜடேஜா, ஷிவம்துபே, குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது ‌ஷமி, பும்ரா, ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, மனீஷ் பாண்டே, சஞ்சுசாம்சன் ஆகியோரும், நியூசிலாந்து அணியில், வில்லியம்சன் (கேப்டன்), குப்தில், டாம்புரூஸ், டெய்லர், சான்ட்னர், காலின் முன்ரோ, கிராண்ட்ஹோம், பென்னட், சவுத்தி, சோதி, டக்னெர், மிச்சேல், ஸ்காட் குஜ்லின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து