அசாமில் மாநிலத்தில் குண்டுவெடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      இந்தியா
Assam State 2020 01 26

Source: provided

கவுகாத்தி : அசாமில் குருத்வாரா மற்றும் தேசிய நெடுஞ்சாலையருகே உள்ள கடையில் நேற்று காலை திடீரென குண்டுவெடிப்பு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

நாடு முழுவதும் 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது . குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், அசாமில் குருத்வாரா மற்றும் தேசிய நெடுஞ்சாலையருகே உள்ள கடையில் நேற்று காலை திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. 

அசாம் மாநிலத்தின் திப்ரூகார் நகரில் கிரகாம் பஜார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண் 37 அருகே நேற்று காலை திடீரென கடை ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. 

இதேபோல், அப்பகுதியில் உள்ள குருத்வாரா அருகிலும் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. 

தகவலறிந்து போலீசார் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து