சீனாவை உலுக்கும் கரோனா வைரஸ் எங்கு உருவானது? புதிய தகவல்கள்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      உலகம்
China Carona virus 2020 01 26

பெய்ஜிங் : சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 56 பேரும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பயோ-வெப்பன்(உயிர் ஆயுதங்கள்) தயாரிக்கும் ஆய்வுக்கூடத்தில் இருந்து வைரஸ் உருவாகியிருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன

மத்திய சீன நகரமான வுஹான் நகரில்தான் முதன் முதலாக கரோனா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அந்த வைரஸ் ஆசியாவின் இதர நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை கரோனா வைரஸ்க்கு 56 பேர் பலியாகியுள்ளார்கள், 300-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான கட்டத்தில் உள்ளார்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீனாவில் வுஹான் மாநிலத்தில் மட்டும்தான் சீன அரசு பயோ-ஆயுதங்கள் உருவாக்கும் ஆய்வுக்கூடத்தை உருவாக்கி இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து வுஹான் வைராலஜி ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வு நிறுவனம் மட்டுமே முழுமையாக ஆபத்தான கிருமிகளைப் பற்றி மட்டும் ஆய்வு செய்யும் நிறுவனமாகும்.

இஸ்ரேல் ராணுவத்தின் புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரியும், சீனாவின் பயோ-ஆயுதங்கள் குறித்து அறிந்தவருமான டேனி ஷோஹம் வாஷிங்டன் டைம்ஸ் நாளேட்டுக்குப் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, சீனாவின் வுஹான் நகரில் மட்டும்தான் அந்நாட்டு அரசு ஆபத்தான கிருமிகள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனத்தையும், ஆய்வுக்கூடங்களையும் உருவாக்கி நடத்தி வந்தது.இந்த ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்படும் கிருமிகள் மனிதர்களைக் கொல்லும் உயிர் ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும்.ஒருநேரத்தில் தங்களிடம் எந்தவிதமான உயிர் ஆயுதங்கள் தயாரிக்கும் ஆய்வுக்கூடம் இல்லை என சீனா மறுத்தது. ஆனால், அந்நாட்டில் அதுபோன்ற ஆய்வுக்கூடங்கள் மூலம் பயோ-வெப்பன் தயாரிப்பது உலகிற்குத் தெரியவந்தது. இந்த ஆய்வுக்கூடங்களில் இருந்து காரோனா வைரஸ் பரவியிருக்கக்கூடும் என சந்தேகிக்கிறேன்.பொதுவாக ஆய்வகங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், ஆய்வாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுப் பரவியிருக்கலாம், அல்லது, ஆய்வகத்தில் இருந்து ஏதேனும் கசிவு ஏற்பட்டு கரோனா வைரஸ் பரவி இருக்கலாம். ஆனால், இதுவரை எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. மேலும் கனடாவில் பணியாற்றும் சீனாவின் வைராலாஜி ஆய்வாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் சீனாவுக்கு மாதிரிகளை அனுப்பி வருகின்றனர். அவ்வாறு அனுப்பும்போது பரவி இருக்கலாம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரையின்படி சீனாவில் வுஹான் நகரில் 4 பெரிய ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒரு ஆய்வகத்தில் உயிரி ஆயுதங்கள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன எனத் தகவல்கள் கிடைத்தன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து