முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.வி.சிந்து, பாரிக்கர் உள்பட 16 பேருக்கு பத்மபூஷன் விருது

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மறைந்த முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர், பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து உள்பட 16 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   

கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்களித்த நபர்களை சிறப்பிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மபூஷன் விருது வழங்கி வருகிறது.  

இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருது நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதில்  விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து, தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபர் டிவிஎஸ் வேணு சீனிவாசன் , சமூக சேவகரான திருமதி.கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன், மறைந்த கோவா முதல் மந்திரியும் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரியுமான மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து