அருண் ஜெட்லி, சுஷ்மா உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      இந்தியா
Arun Jatli-Susma 2020 01 26

Source: provided

புதுடெல்லி : முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி, முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்பட 7 பேருக்கு மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம்  பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, 7 பேருக்கு பத்ம விபூஷன், 16 பத்ம பூஷண் மற்றும் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளை அறிவித்துள்ளது. 

இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான பத்மவிபூஷன் விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், மேரி கோம் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதில், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு இறப்புக்கு பிந்தைய விருதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதேபோல், சமீபத்தில் மறைந்த உடுப்பி பெஷாவர் விஸ்வேஸ்வர தீர்த்தர் சுவாமிக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டு உள்ளது. 

விளையாட்டுத் துறையில், குத்துச்சண்டை பிரிவில் மேரிகோம் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து