கேரளாவில் 3 மாத குழந்தையை கொன்று ஆசிரியை தற்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      இந்தியா
Kerala suicide 2020 01 26

Source: provided

கொழிஞ்சாம்பாறை : கேரளாவில் 3 மாத குழந்தையை கொன்று ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரியை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி நிஷா. இருவரும் ஐதராபாத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்தனர். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிஷா பிரசவத்திற்காக கடந்த 6 மாதத்திற்கு முன் வடக்கஞ்சேரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். 

3 மாதத்திற்கு முன்பு நிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. மனோஜ் ஐதராபாத்தில் குடியிருந்து வருவதால் நிஷா மற்றும் அவரது குழந்தையை மனோஜின் தந்தை கவனித்து வந்தார். நேற்று மாலை மனோஜின் தந்தை வெளியில் சென்று இருந்தார். அப்போது நிஷா தனது 3 மாத பெண் குழந்தையின் உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்தார். பின்னர் தனது உடலிலும் தீயை பற்ற வைத்தார். இருவரும் சம்பவ இடத்திலே உடல் கருகி பலியானார்கள். 

வெளியே சென்று இருந்த மனோஜின் தந்தை வீடு திரும்பிய போது தனது மருமகள், பேத்தி தீயில் கருகி பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து வடக்கஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாய் மற்றும் குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

குழந்தையை கொன்று நிஷா தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து