100-வது பிறந்த நாளை கொண்டாடிய இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      விளையாட்டு
Cricketer Vasant Raiji 2020 01 26

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் வயது முதிர்ந்த கிரிக்கெட் வீரரான வசந்த் ராய்ஜி நேற்று தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார்.   

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர் வசந்த் ராய்ஜி. இவருக்கு நேற்று 100வது பிறந்த நாளாகும். 

இந்தியாவின் மிக வயது முதிர்ந்த கிரிக்கெட் வீரராக அறியப்படும் இவர் கடந்த 1920ம் ஆண்டு ஜனவரி 26ந்தேதி பிறந்துள்ளார். இவருக்கு முன் இந்த பெருமையை பெற்றிருந்தவர் பி.கே. கருடாச்சார். கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 26ல் கருடாச்சார் மறைவுக்கு பின் ராய்ஜி இந்தியாவின் வயது முதிர்ந்த முதல் தர கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். தெற்கு மும்பையில் உள்ள வால்கேஷ்வர் என்ற பகுதியில் அவர் வசித்து வருகிறார். 

அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அணியின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது வீட்டிற்கு நேரில் சென்று கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.  

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து