ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் - சஞ்சய் மஞ்ச்ரேகர் பேச்சால் ரசிகர்கள் கோபம்

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2020      விளையாட்டு
Fans are angry with Sanjay Manjrekar s speech 2020 01 27

டெல்லி : கடந்த ஆண்டில் உலக கோப்பையின்போது ரவீந்திர ஜடேஜா மற்றும் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே போன்றவர்கள் குறித்து எதிர்மறையான கருத்துக்களை கூறி முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானார். ஜடேஜாவை துண்டு துணுக்கு வீரர் என்று மஞ்ச்ரேகர் தெரிவித்த கருத்து ரசிகர்களிடையே கடுமையான சர்ச்சைகளை எழுப்பியது. இதையடுத்து சமூக வலைதளத்தில் அவர்குறித்த மீம்ஸ்களை போட்டு ரசிகர்கள் தாளித்து எடுத்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஜடேஜாவை அவர் வம்பிழுத்துள்ளார். இந்தியா -நியூசிலாந்து இடையிலான 2வது டி20 போட்டியில் மேன் ஆப் த மேட்ச் விருது பௌலர் ஒருவருக்கே அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர் தொடர்ந்து அது யார் என்ற ஜடேஜாவின் கேள்விக்கு நீங்க இல்லை, புஜாரா என்று பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஜடேஜாவை அவர் வம்பிழுத்துள்ளார். இந்தியா -நியூசிலாந்து இடையிலான 2வது டி20 போட்டியில் மேன் ஆப் த மேட்ச் விருது பௌலர் ஒருவருக்கே அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர் தொடர்ந்து அது யார் என்ற ஜடேஜாவின் கேள்விக்கு நீங்க இல்லை, புஜாரா என்று பதிலளித்துள்ளார்.

கடந்த ஆண்டில் நியூசிலாந்திற்கு எதிரான உலக கோப்பை அரையிறுதிப் போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா குறித்து துண்டு துணுக்கு வீரர் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்திருந்தார். இதேபோல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே குறித்தும் எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். அவரின் இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள், இதுகுறித்து மீம்ஸ் வெளியிட்டு பழிதீர்த்துக் கொண்டனர்.

இதையடுத்து தன்னுடைய இந்த பேச்சு குறித்து அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். வர்ணனையாளராக தனக்கு கடந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக இருந்ததாகவும் உணர்ச்சிகள் தன்னை மீறி வெளிப்பட்டது குறித்து தான் வருந்துவதாக தெரிவித்தார். தொழில்பூர்வமற்ற மற்றும் அநாகரிகமாகவும் தான் நடந்து கொண்டதாகவும் கூறிய அவர், இதற்காக வருத்தம் தெரிவித்திருந்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து