17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு: கணிக்க தவறி விட்டதாக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      உலகம்
World Health Organization 2020 01 28

வாஷிங்டன் : கொரோனா வைரசை கணிக்கத் தவறி விட்டோம் என்று உலக சுகாதார அமைப்பு முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 106 பேர்  பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,515 ஆக  இருந்தது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தில் உள்ளன. அங்குதான் வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டது. ஒரு நாளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் இந்த பாதிப்பு பரவி உள்ளது. கொரோனா வைரஸ் குறித்து கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலக நாடுகள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை, இது மிதமான நிலையிலேயே உள்ளது என அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் சீனாவில் மட்டும் 82 பேர் பலியாகியுள்ளதுடன், ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் கொரோனா வியாதி அச்சுறுத்தலை ஏற்படுத்த தொடங்கியதை அடுத்து, கணிக்கத் தவறியதாக கூறி உலக சுகாதார அமைப்பு முதன் முறையாக தங்கள் தவறை ஒப்புக்கொண்டுள்ளது. சீனாவிற்கு வெளியே மொத்தம் 15 நாடுகளில்  தற்போது கொரோனா வியாதி பாதிப்புகள் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கம்போடியா கொரோனா வியாதி பாதிப்பை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இலங்கையில் சீன நாட்டவர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நபர் சிகிச்சை பலனின்றி  மரணமடைந்துள்ளார். இதனிடையே இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழு ஒன்று சீனாவில் 100,000-க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அவர்களில் பலரும் தாங்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதை தெரியாமல் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

ஹாங்காங்கில் 8 பேர், தாய்லாந்தில் 8 பேர், மக்காவோவில் 5 பேர், ஆஸ்திரேலியாவில் 5 பேர், சிங்கப்பூரில் 5 பேர், அமெரிக்காவில் 5 பேர், மலேசியாவில் 4 பேர், ஜப்பானில்  4 பேர், தென் கொரியாவில் 4 பேர், தைவானில் 4 பேர், பிரான்சில் 3 பேர், வியட்நாமில் 2 பேர், கனடா, ஜெர்மனி, நேபாளரம் ஆகிய நாடுகளில் தலா ஒரு நபர், இலங்கையில் 2 நபர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து