முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 5 ஆண்டுகளில் 3½ கோடி பேர் வேலை இழப்பு - பிரியங்கா கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

கடந்த 5 ஆண்டுகளில் 3 கோடியே 64 லட்சம்பேர் வேலை இழந்துள்ளதாக வெளியான தகவலை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.  

கடந்த 5 ஆண்டுகளில் 3 கோடியே 64 லட்சம்பேர் வேலை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில், “கடந்த 5 ஆண்டுகளில் 7 முக்கிய துறைகளில் 3 கோடியே 64 லட்சம்பேர் வேலை இழந்துள்ளனர். இதுதான்  வேலைவாய்ப்பு குறித்த பா.ஜனதா அரசு வாக்குறுதிகளின் யதார்த்த நிலை. எனவேதான் வேலைவாய்ப்பு குறித்து பேச பா.ஜனதா அரசு வெட்கப்படுகிறது“ என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து