முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெயில்களில் பயணிகள் கட்டண வருவாய் ரூ.400 கோடி சரிவு

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

ரெயில்களில் பயணிகள் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.400 கோடி குறைந்துள்ளது. அதே சமயத்தில், சரக்கு கட்டண வருவாய் ரூ.2 ஆயிரத்து 800 கோடி அதிகரித்துள்ளது.  

மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், ரெயில்வேக்கு கிடைத்த கட்டண வருமானம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு ரெயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதலாவது காலாண்டில், ரெயில்களில் பயணிகள் கட்டணம் மூலம் ரூ.13 ஆயிரத்து 398 கோடியே 92 லட்சம் வருவாய் கிடைத்தது. 2-வது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) இந்த வருவாய் ரூ.13 ஆயிரத்து 243 கோடியே 81 லட்சமாக குறைந்தது. 3-வது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) ரூ.12 ஆயிரத்து 844 கோடியே 37 லட்சமாக சரிந்துள்ளது. அதாவது, முந்தைய காலாண்டை விட வருவாய் சுமார் ரூ.400 கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே சமயத்தில், சரக்கு கட்டண வருவாய் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில், சரக்கு கட்டண வருவாய் ரூ.29 ஆயிரத்து 66 கோடியே 92 லட்சமாக இருந்தது. 2-வது காலாண்டில், ரூ.25 ஆயிரத்து 165 கோடியே 13 லட்சமாக சரிந்தது. ஆனால், 3-வது காலாண்டில் ரூ.28 ஆயிரத்து 32 கோடியே 80 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய காலாண்டை விட சுமார் ரூ.2 ஆயிரத்து 800 கோடி அதிகமாகும்.  சரக்கு கட்டணத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை சரிக்கட்ட ரெயில்வே நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக வருவாய் உயர்ந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து