முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன்: கால் இறுதியில் நடால், ஹாலப்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் பிரிவில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலும், மகளிர் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹாலப்பும் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 23-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 3-6, 7-6 (8-6), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால்பதித்தார்.7-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 17-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூபலெவைவும், 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 10-ம் நிலை வீரரான பிரான்சின் கெல் மோன்பில்ஸையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றில்நுழைந்தனர்.4-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 6-2, 2-6, 4-6, 7-6 (7-2), 6-2என்ற செட் கணக்கில் 3 மணி நேரம்25 நிமிடங்கள் போராடி 15-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவிடம் வீழ்ந்து கால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 16-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸையும், 28-ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் அனெட் கோன்டாவிட் 6-7 (4-7), 7-5, 7-5 என்ற செட் கணக்கில் போலந்தின் இகா ஸ்வெய்டெக்கையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.17-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 7-6 (7-5), 6-7 (4-7), 2-6 என்ற செட் கணக்கில் 30-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 32-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் 9-ம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து