டு பிளிஸ்சிஸூடன் வாக்குவாதம் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      விளையாட்டு
Stuart Pratt-Du Blizzis 2020 01 28

ஜோகன்ஸ்பர்க் : ஜோகன்ஸ்பர்க்கில் டு பிளிஸ்சிஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்த போட்டியின் நேற்று முன்தின  ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவின் டு பிளிஸ்சிஸ் ஆட்டமிழந்து செல்லும்போது அவருடன் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் 15 சதவீத அபராதத்துடன், சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் பிலாண்டர், ரோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ரபடா ஆகியோர் மீது ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து