ஐ.எஸ்.எல். கால்பந்து: 8-வது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி - புவனேசுவரத்தில் இன்று ஒடிசா - கோவா அணிகள் மோதல்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      விளையாட்டு
Odisha-Goa clash 2020 01 28

கொல்கத்தா : ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா அணி தனது 8-வது வெற்றியை பதிவு செய்தது.

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த 68-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவு செய்தது. கடைசி நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் பல்வந்த் சிங் வெற்றிக்கான கோலை அடித்தார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியது. புவனேசுவரத்தில் இன்று (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 69-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து