முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியுரிமை திருத்தச் சட்டத்தை முழுமையாக படிக்காதவர்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் போடியில் எச்.ராஜா பேச்சு

புதன்கிழமை, 29 ஜனவரி 2020      தேனி
Image Unavailable

போடி,-  போடியில் புதன் கிழமை நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
      குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து போடியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. போடி அரசு போக்குவரத்து பணிமனை முன் தொடங்கிய பேரணியில் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார். போடி திருவள்ளுவர் சிலை வரை நடந்தே வந்த அவர் திருவள்ளுவர் சிலை திடலில் பேசினார். அப்போது அவர் கூறியது:
      குடியுரிமை திருத்தச் சட்டத்தை முழுமையாக படிக்காதவர்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சட்டவிரோதமாக குடியேற நினைப்பவர்களுக்கு மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பு ஏற்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு போராடுவதன் மூலம் இந்தியாவில் பயங்காரவாதத்தை வேரூன்ற செய்ய நினைக்கிறார்கள். அதன் மூலம் இந்தியாவை முஸ்லீம் நாடாக்கவும் முயல்கிறார்கள்.
     குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தார் எனக்கூறி பாராளுமன்ற உறுப்பினரை தாக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமாரை தாக்குகிறார்கள். காவல்துறை சார்பு ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்கள். காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலையை ஏற்படுத்துகிறார்கள்.
     நாட்டை பிளவுபடுத்துவதற்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பெயரில் போராட்டம் நடத்துபவர்கள் தேச துரோகிகள், அயோக்கியர்கள். இவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்றார்.
     பேரணியில் தேனி மாவட்ட பா.ஜ.க. தலைவர் வெங்கடேஷ்வரன், நகர தலைவர் தண்டபாணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எச்.ராஜா வருகையையொட்டி திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. நிர்மல்குமார் ஜோஷி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்தபோதிலும் போக்குவரத்துகளை மாற்றியமைக்காததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போடி திருவள்ளுவர் சிலை பகுதியில் போக்குவரத்து சீராக ஒரு மணி நேரம் ஆனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து