முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் பயங்கரவாதியா? டெல்லி மக்களின் தீர்ப்புக்கு விடுகிறேன்: பா.ஜ.க.வுக்கு கெஜ்ரிவால் சவால்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

பா.ஜ.க.வைச் சேர்ந்த பர்வேஷ் வர்மா டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என்று கூறியதற்கு டெல்லி முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, நான் பயங்கரவாதியா அல்லது டெல்லி மக்களின் மகனா என்பதை தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு விட்டு விடுகிறேன் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிராகப் போராட இந்திய வருவாய் சேவை அதிகாரி பொறுப்பைத் துறந்தேன், எந்த பயங்கரவாதியும் இதனைச் செய்வாரா?பா.ஜ.க. என்னை பயங்கரவாதி என்று அழைக்கிறது, என் வாழ்நாள் முழுதும் நான் மக்களுக்காகவே போராடி வருகிறேன், ஒவ்வொரு நாளும் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் பணியாற்ற முயற்சி செய்கிறேன். நம் குழந்தைகளுக்கு நான் நல்ல கல்வியை அளித்துள்ளேன். இது என்னை பயங்கரவாதியாக்கி விட்டதோ?. உயர்மட்டத்தில் இருக்கும் சிலரின் ஊழல்களை அம்பலப்படுத்தினேன், சர்க்கரை நோய் இருந்தும், வாழ்க்கையை பணயம் வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டேன். அவர்கள் எனக்கு பிரச்சினைகள் ஏற்படுத்துவதையே செய்து வருகின்றனர். எனவே நான் பயங்கரவாதியா அல்லது டெல்லி மக்களின் சகோதரனா, மகனா என்ற முடிவை மக்களிடத்தில் விட்டு விடுகிறேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து