முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம் - மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்:

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.

இந்த  பட்ஜெட்டில் விவசாயிகளின் நலன் சார்ந்த அறிவிப்புகள் அதிகமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததற்கு கிராமப்புறங்களும் மக்கள் செலவளிக்கும் திறன் குறைந்தது முக்கிய காரணம் என்பது மத்திய அரசின் கணிப்பு. எனவே விவசாயிகளுக்கு பயிர் கடன் உதவியை அதிகரித்து  அவரின் வாங்கும் திறனை அதிகரிப்பது அதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதை, சூசகமாக கொண்டே விவசாயிகளின் வருவாயை 2 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றன. நாட்டில் கடந்த 2  ஆண்டுகளாக வறட்சி, பருவம் தவறிய மழை, வெள்ள பாதிப்புகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் நாட்டின் பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து