மானாமதுரையில் 'உலக தொழு நோய் தினம்' உறுதி மொழி

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2020      சிவகங்கை
 World Leprosy Day

மானாமதுரை,-உலக முழுவதும் ஆண்டும் தோறும் ஜனவரி 30-ம் தேதியன்று உலக தொழுநோய் தினமாக உலக சுகாதார நிறுவனம் அனுசரித்து வருகிறது.பொதுமக்கள் மத்தியில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதே இந்தத் தினம் கடைப்பிடிப்பதன் முக்கிய நோக்கமாக உள்ளது. தொழுநோய் என்பது 'மைக்கோபேக்டீரியம் லெப்ரேயாவால்' ஏற்படும் நீடித்தத் தொற்று நோயாகும். இது குறிப்பாக தோலையும், நுனி நரம்புகளையும் பாதிக்கிறது. புள்ளிகள் ஏற்பட்டு, பெரிதாகி உணர்வு இல்லாமல் பக்கவாதம் ஏற்படுத்துவது இந்நோயின் தன்மையாகும்.கடந்த 2018-ம் ஆண்டில் 'இரண்டு லட்சம்' புதிய நோயாளிகள் 127 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளனர்.அவர்களில் பாதி பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது கவலையளிக்கும் விசயமாக உள்ளது.மத்திய, மாநில அரசுகள் தொழு நோயாளிகளுக்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.தென் தமிழகத்தில் தொழு நோய்க்கான சிறப்பு மருத்துவத்துமனை மானாமதுரையில் தயாபுரத்தில் டி.எல்.எம். சமுதாய மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இம் மருத்துவமனையில் நாள்தோறும் தோல் நோய் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று தொழு நோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நோயாளிகள், ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியரின் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியை எடுத்து கொண்டனர். இம் மருத்துவமனையின் கண்காணிப்பாளரான மருத்துவர் சுரேஷ் ஹெர்பர்ட் கூறுகையில், சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்ச்சியற்ற தேமல், தோலில் தடிப்பு, மினுமினுப்பு, தடித்த வலியுடன் கூடிய நரம்புகள், கை, கால் மதமதப்பு போன்றவை தொழு நோயின் அறிகுறிகளாகும்.ஆரம்ம நிலையிலேயே கண்டறிந்தால்,  தொழுநோயை குணப்படுத்த முடியும். துவக்க நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் கை, கால்கள் ஊனம் அடைவதில் இருந்து தடுக்கலாம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து