தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2020      வர்த்தகம்
gold 2020 01 29

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 88 குறைந்து, ரூ. 31,040 ஆக விற்பனையானது.

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 11 குறைந்து ரூ.3,880 ஆக இருந்தது. இந்த நிலையில், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு காசுகள் உயர்ந்து ரூ.50.20 காசுகளாவுகம், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.50,200 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வந்தது. கடந்த 8ம் தேதி தங்கம் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, ஒரு சவரன் ரூ.31,176 என்று விற்பனையானது. இதுதான் தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாக கருதப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமான போக்கு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 25-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 30,896-க்கும், 27-ம் தேதி ரூ. 31,056, 28-ம் தேதி ரூ.31,000 என்றும் தங்கம் விற்பனையானது. 29-ம் தேதிஒரு கிராம் ரூ.3,856-க்கும், சவரன் ரூ.30,848 என்றும் விலை குறைந்தது.

நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு 35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,891-க்கும், சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.31,128-க்கும் விற்கப்பட்டது. மீண்டும் தங்கம் விலை சவரன் 31 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 88 குறைந்து, ரூ.31,040 ஆக விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து