முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசகர் ஆகிறார்

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : மதசார்பற்ற ஜனதா தளத்தை பழைய நிலைக்கு கொண்டு வர ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள தேர்தல் வியூக அறிஞர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகள் பெற முன்னாள் முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார்.   

கர்நாடக சட்டப்பேரவை மற்றும் எம்.பி. தேர்தல் மட்டுமல்லாது, உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்தோல்விகளை சந்தித்து வந்துள்ளதால் மதசார்பற்ற ஜனதா தளம் தொண்டர்களிடையே உற்சாகம் இல்லை.

கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவுக்கு வயதாகி விட்டதால், கட்சியை தனது கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்திருக்க முடியாமல் திணறி வருவதோடு சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்க முடியாமல் தவிக்கிறார்.

முன்னாள் முதல்வர் குமாரசாமியும்  இதய நோயால் அவதிப்பட்டுள்ளதால், அவரால் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்க்க முடியவில்லை. தேவகவுடா, குமாரசாமிக்கு பதிலாக கட்சியை பலப்படுத்தவும், மக்களை ஈர்க்கும் செல்வாக்கு இல்லாததாலும் மதசார்பற்ற ஜனதாதளத்தின் வாக்குவங்கி சுருங்கி வந்துள்ளது. இது இருவரையும் கவலையடைய செய்துள்ளது.

இந்த நிலையில் மதசார்பற்ற ஜனதா தளத்தை பழைய நிலைக்கு கொண்டு வர ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள தேர்தல் வியூக அறிஞர் பிரசாந்த் கிஷோரை அணுக தேவகவுடா திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரசாந்த் கிஷோரிடம் பேச்சுவார்த்தை நடத்த குமாரசாமியும் திட்டம் வகுத்துள்ளார். 

இதுகுறித்து கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கூறியதாவது:-

மதசார்பற்ற ஜனதா தளத்தின் நலன் கருதி பிரசாந்த் கிஷோரின் உதவியை பெறுவதில் தவறில்லை. கட்சியை கட்டமைக்கவும், பலப்படுத்தவும் அவரது ஆலோசனைகள் பயன் அளிக்கலாம். அடிமட்டத்தில் இருந்து கட்சியைப் பலப்படுத்த ஏற்கனவே திட்டமிட்டுள்ளோம். வருகிற 10, 11-ந் தேதி தேசிய அளவில் மதசார்பற்ற ஜனதா தளம் மாநாடு நடக்கும்போது கட்சியின் பலம் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து