தங்கம் விலை சவரனுக்கு ரூ. 304 குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2020      வர்த்தகம்
gold price 2020 02 04

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. தங்கம் விலை கடந்த 1-ம் தேதி ரூ.31,376 ஆக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இதுவே அதிகபட்ச விலையாக இருந்தது.

அதன்பிறகு தங்கம் விலை ஏறுவதும், கொஞ்சம் இறங்குவதுமாக  மாறி மாறி இருந்தது. இந்நிலையில் நேற்று (பிப். 4-ம் தேதி )சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.304 குறைந்து ரூ.30,848-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு  ரூ. 38 குறைந்து ரூ. 3856-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ. 49,80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து