முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 636 ஆக உயர்வு

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலினால் பலியானோர் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீன அரசு செய்வதறியாது திணறி வருகிறது

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமல்லாது, தைவான், மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஜப்பான் உள்பட மொத்தம் 23 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.   சீனாவில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 636 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் 31,161 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் காலை நிலவரப்படி, கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 563 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 73 பேர் பலியான சம்பவம் சீன மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து