முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் பரவுவதற்கு எறும்பு திண்ணிகள் காரணமாக இருக்கலாம் - சீன வேளாண் பல்கலை. ஆய்வில் தகவல்

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீன விஞ்ஞானிகள் ஒரு குறிப்பிட்ட வகை  எறும்பு திண்ணிகள் கொரோனா  வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு  722 பேர் பலியாகி உள்ளனர்.  34,546 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சீன விஞ்ஞானிகள் ஒரு குறிப்பிட்ட வகை  எறும்பு திண்ணிகள் கொரோனா  வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். தென் சீன வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் குழுவின்  ஆய்வின்படி, ஆபத்தான பாலூட்டிகளிலிருந்து பிரிக்கப்பட்ட மரபணு வரிசை வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 99 சதவீதம் ஒத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காட்டு விலங்குகளின் 1,000 மெட்டஜெனோம் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன, மேலும் எறும்பு திண்ணிகள்  பெரும்பாலும் வைரசை பரப்பி இருக்கலாம்  என்று கண்டறியப்பட்டது. சீனாவிலும் வியட்நாமிலும் மனித நுகர்வு மற்றும் மருத்துவ மதிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் வேட்டையாடப்படுவதால் எறும்பு திண்ணிகள் அதிகம் கடத்தப்படும் விலங்குகள் ஆகும். பல்கலைக் கழகத்தின் தலைவரான லியு யாகோங், இந்த ஆய்வு தொற்றுநோயை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் துணைபுரிகிறது, அத்துடன் காட்டு விலங்குகள் குறித்த கொள்கைகளுக்கு அறிவியல் குறிப்பையும் வழங்குகிறது என கூறினார். முன்னதாக, பல சீன வல்லுநர்கள் இந்த வைரஸ் வவ்வால்களிலிருந்து தோன்றியதைக் கண்டுபிடித்தனர், அதன் பிறகு சீனா இது போன்ற  விலங்குகளை வர்த்தகம் செய்வதற்கு தற்காலிக தடை விதித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து