முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரோனா வைரஸ்: சீனாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா 100 மில்லியன் டாலர் ஒதுக்கீடு

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : கரோனா வைரஸுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலரை அளிக்க இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறும் போது,

கரோனா வைரசுக்கு எதிரான சீனாவின் போராட்டத்திற்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலரை அமெரிக்கா அளிக்கிறது. மேலும் வூஹானில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுடன் இணைத்து மனிதாபிமான உதவிகள் கிடைக்க ஒருங்கிணைத்து வருகிறோம். மேலும் பாதுகாப்பிற்காக மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை சீனா சிறப்பாக செய்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்திருந்தார். சீனாவில் பரவி வரும் கரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,500 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் தேசிய சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி மேலும் 86 பேர் மரணமடைந்ததையடுத்து சாவு எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து