முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் மகளை அரவணைக்க முடியாமல் நர்ஸ் தவிப்பு: வைரலாகும் வீடியோ

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : மகளுக்கு பிரியா விடை அளிக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சீனத்து செவிலியர் பெண்மணி.

சீனாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு செவிலியர் தன் மகளிடம் தூரத்திலிருந்தே அணைத்துக் கொள்வது போல கைகளை விரித்து பிரியாவிடை அளித்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகியது. இதைக் கண்ட நெட்டிசன்கள் உணர்ச்சிவசப்பட்டனர். இந்த வீடியோவை சீன அரசு செய்தி ஊடகம் சினுவா டுவீட் செய்துள்ளது. காண்போர் அனைவரையும் உருக வைத்து உலகம் முழுவதும் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மருத்துவமனைக்கு வெளியே செவிலியர் பாதுகாப்பு உடைகள், ஒரு முகமூடி அணிந்து கொண்டு தனது மகளிடமிருந்து பல மீட்டர் தொலைவில் தள்ளி நிற்கிறார். தூரத்திலிருக்கும் சிறுமி கூச்சலிட்டு, அம்மா, நான் உன்னை இழக்கிறேன் என்று கதறுகிறார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, அம்மா, அம்மா உங்களையும் இழக்கிறார், நான் உன்னை அணைத்துக் கொள்கிறேன் என்று பதிலளித்தபடியே கைகளை விரிக்க அதற்கு மகளும் கதறியபடியே கைகளை விரித்து அணைத்துக் கொள்வதுபோல செய்கிறார். இதற்கிடையே மகள், அம்மா சீக்கிரம் வீட்டிற்கு வர முடியுமா என்று சிறுமி கேட்க, அதற்கு அந்த செவிலியர் தாய், உன் தாய் ஒரு அரக்கனை எதிர்த்துப் போராடுகிறாள் என்றும்,  வைரஸ் தோற்கடிக்கப்பட்டவுடன், அம்மா வீட்டில் இருப்பார் என்றும் சொல்கிறார். பின்னர் வீட்டிலிருந்து எடுத்து வந்த உணவுப் பாத்திரத்தை தூரத்தில் கொண்டு வந்து வைத்து விட்டு மகள் செல்ல, அதனை எடுத்துக் கொண்ட செவிலியர் கையசைத்தபடியே செல்கிறார். தன் தாய் தூரத்திலிருந்து உணவை எடுத்துச் செல்வதை சிறுமி பார்த்தவாறு அழுதபடியே நிற்கிறார். சமூக ஊடகங்களின் வாசகர்களிடமிருந்து வரும் பதிவுகளால் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து