முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரோனா வைரஸ்: சீனாவில் உள்ள 171 பேரை மீட்கும் திட்டத்தை கைவிட்டது வங்கதேசம்

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

டாக்கா : கரோனா ரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் சிக்கி இருக்கும் தங்கள் நாட்டு மக்கள் 117 பேரை மீட்கும் திட்டத்தை வங்கதேசம் அரசு கைவிட்டது.

தங்கள் நாட்டு மக்களை அழைத்துச் செல்லும் விமானத்தை இயக்க எந்த விமானியும் முன்வராததாலும், விமான ஊழியர்கள் உடன் செல்ல மறுத்து விட்டதாலும் இந்த முடிவை வங்கதேச அரசு கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரசுக்கு இதுவரை அங்கு 800-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார். 25 நாடுகளுக்கும் மேலாக அந்த வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் சீனாவில் சிக்கி இருந்தனர். அவர்களை மீட்க முதல்கட்டமாக கடந்த 1-ம் தேதி அரசு விமான நிறுவனமான பிமான் ஏர்லைன்ஸ் சென்றது. அந்த விமானத்தில் 15 குழந்தைகள் உள்ளிட்ட 312 பேர் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் இன்னும் 171பேர் சீனாவில் சிக்கி இருப்பதால், 2-வது கட்டமாக அவர்களை அழைத்துவர வங்கதேச அரசு விமானத்தை ஏற்பாடு செய்தது. ஆனால், சீனாவில் தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸின் தாக்கத்துக்கு அஞ்சி, தங்களின் உயிரைப் பாதுகாக்கும் வகையில் விமானிகள் விமானத்தை இயக்க விமானிகள் மறுத்து விட்டனர், மேலும், விமான ஊழியர்களும் விமானத்தில் செல்ல மறுத்து விட்டனர். இது குறித்து வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன் நிருபர்களிடம் கூறுகையில்,

எங்களால் இப்போது எந்த விமானத்தையும் அனுப்ப முடியாது. விமானியோ அல்லது விமான ஊழியர்களோ செல்ல மறுத்து விட்டார்கள். ஆதலால், சீனாவில் சிக்கி இருக்கும் வங்கதேச மக்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்து விட்டோம். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றைச் சீன அதிகாரிகள் வழங்குகிறார்கள். பற்றாக்குறை ஏற்பட்டது என்று கூறுவது தவறாகும். சீனாவில் சிக்கி இருக்கும் வங்கதேச மக்களிடம் தொடர்ந்து வங்கதேச அரசு தொடர்பில் இருந்து வருகிறது. இப்போதுள்ள சூழலில் அவர்களை மீட்க முடியாவிட்டாலும் விரைவில் மீட்போம் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து