முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உரிமையாளரின் நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கிய நாய்

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

தென் ஆப்பிரிக்கா : செல்ல நாய் ஒன்று தனது உரிமையாளரின் நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கிய சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் நடந்துள்ளது.

செல்லப் பிராணிகள் எப்போதும் குறும்புத்தனத்தில் ஈடுபட்டு தனது உரிமையாளரின் கவனத்தை பெற விரும்பும். அதிலும் குறிப்பாக நாய்கள் என்றாலே அமர்க்களம் தான். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவைச் சேர்ந்த பெப்பர் என்ற செல்ல நாய், தற்செயலாக தனது பெண் உரிமையாளரின் விலையுயர்ந்த நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கி விட்டது. இதனால் ஏற்பட்ட உபாதையில் நாய் அவதிப்பட்டது. ஒருபுறம் தனது நிச்சயதார்த்த மோதிரத்தை தேடிக் கொண்டிருந்த உரிமையாளருக்கு, செல்ல நாயின் உபாதை மேலும் கவலையை ஏற்படுத்தியது. இதனால் உடனடியாக தனது செல்ல நாய் பெப்பரை அருகிலுள்ள விலங்குகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அப்போது பெப்பரை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் மோதிரம் இருப்பதை எக்ஸ்ரே மூலம் உறுதிபடுத்தினர். மோதிரம் கிடைத்து விட்டாலும், அது தனது செல்ல நாயின் வயிற்றில் சிக்கியிருப்பதைக் கண்டு உரிமையாளருக்கு கவலை. பெப்பரின் சுட்டித்தனத்தால் அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் குழப்பம். இந்த நிலையில், பெப்பருக்கு சில மருந்துகளை வழங்கிய மருத்துவர்கள், மோதிரத்தை அறுவை சிகிச்சையின்றி வாந்தியின் மூலம் வெளியே எடுத்தனர். பின்னர் இந்த சம்பவத்தை மருத்துவமனை தனது சமூக வலைதளப் பக்கமான முகநூலில் நகைச்சுவையுடன் பகிர்ந்தது. அதில், என் பெயர் பெப்பர். நான் கொஞ்சம் குமட்டலாகத் தோன்றுகிறது? அதனால்தான் கால்நடை மருத்துவர் என்னை வாந்தியெடுக்க வைக்க எதையோ கொடுத்தார்! அவர் இதை வேண்டுமென்றே செய்யவில்லை, எனது குறும்புத்தனத்தால் நான் என் அம்மாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை அப்படியே விழுங்கிவிட்டேன்!!!. இதுகுறித்து வேறு எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம்! அந்த நேரத்தில் அது எனக்கு ஒரு நல்ல யோசனையாகத் தோன்றியது!!" என்று பதிவிடப்பட்டது. மேலும் இதனுடன் நாயின் வயிற்றில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படத்தையும் பகிரப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து