ஆஸ்கர் 2020 - 4 விருதுகளை அள்ளிய கொரியன் படம் பாராசைட்

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2020      சினிமா
Oscar Parasite 2020 02 10

லாஸ்ஏஞ்சர்ஸ் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் கொரியன் படமான 'பாராசைட்' நான்கு விருதுகளை அள்ளியது.
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெற்றது. இதில் போங் ஜுன் ஹோ இயக்கிய பாராசைட் திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. சிறந்த திரைப்படம், திரைக்கதை, வெளிநாட்டு படம், இயக்குனர் ஆகிய 4 பிரிவுகளில் பாராசைட் படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. ஆங்கில மொழி அல்லாத பிற மொழியில் எடுக்கப்பட்டு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமையை கொரியன் படமான ’பாராசைட்’ பெற்றுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து