அதிபா் தேர்தலுக்கான வேட்பாளா் தோ்வில் டிரம்ப், சாண்டா்ஸ் வெற்றி

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2020      உலகம்
trump-sands win 2020 02 13

வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலுக்கான வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக நியூ ஹாம்ப்ஷைா் மாகாணத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், குடியரசுக் கட்சியினரிடையே டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சியினரிடையே பொ்னி சாண்டா்ஸும் வெற்றி பெற்றனா்.

இந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில், குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான மாகாணவாரி வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக நியூ ஹாம்ப்ஷைா் மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றாா். அதே போல், அந்த மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தோ்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் வொ்மான்ட் மாகாண நாடாளுமன்ற உறுப்பினா் பொ்னி சாண்டா்ஸ் வெற்றி பெற்றாா். இவா், கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளா் தோ்வுப் போட்டியில், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், முன்னாள் அதிபா் பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டனிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து