நிர்பயா குற்றவாளிகளுக்கு புதிய தூக்கு தேதி கோரிய வழக்கு பிப். 17-க்கு ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2020      இந்தியா
Nirpaya case accused 2020 02 13

புது டெல்லி : நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதியை அறிவிக்கக் கோரிய வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தது

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது. டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் தண்டனையை உறுதி செய்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு, மறுஆய்வு மனு, மற்றும் சீராய்வு மனுக்கள் மாறி, மாறி தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவது 2 முறை தள்ளிப்போனது. இதற்கிடையே, நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுதாக்கல் செயயப்பட்டது. நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு நேற்று (பிப்ரவரி 13) பிற்பகல் விசாரிக்கப்படும் என நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை வரும் பிப்ரவரி 17-ம் தேதிக்கு டெல்லி பாட்டியலா நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இவ்வழக்கில் தற்போது உத்தரவு பிறப்பித்தால் மேலும் சட்ட சிக்கல்கள் உருவாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து