கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      உலகம்
Colombia plane crash 2020 02 14

கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.  

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் தலைநகர் போகோடாவில் இருந்து நேற்று முன்தினம் காலை சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இரட்டை என்ஜின்கள் கொண்ட இந்த விமானத்தில் விமானி உள்பட 4 பேர் பயணம் செய்தனர்.

புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து