பெண்கள் டி20 உலக கோப்பை: இந்தியா - பாக். போட்டி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2020      விளையாட்டு
t20 worldcup disturb rain 2020 02 17

பிரிஸ்பேன் : பெண்கள் டி20 உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. பெண்களுக்கான டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் வருகிற 21-ம் தேதி தொடங்குகிறது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் பீல்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பயிற்சி ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது.ஆனால் பிரிஸ்பேனில் கனமழை பெய்ததால் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்தியா இன்று கடைசி பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.இந்தியா முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இது உலக கோப்பையின் தொடக்க போட்டியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து